Provincial MSO (Open) Exam Application 2026 – Provincial Public Service Commission, Central Province
மத்திய மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்
தரம் III – திறந்த போட்டிப் பரீட்சை – 2026
CENTRAL PROVINCIAL MANAGEMENT SERVICE OFFICERS – GRADE III
📢 முக்கிய அறிவிப்பு
மத்திய மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை 2026 டிசம்பர் மாதத்தில் நடைபெறவுள்ளது.
விண்ணப்பங்கள் இணையவழியாக (Online) மட்டும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
📝 விண்ணப்ப காலம்
🟢 விண்ணப்பம் ஆரம்பம்: 21.09.2026 – காலை 9.00 மணி
🔴 விண்ணப்பம் முடிவு: 16.10.2026 – இரவு 9.00 மணி
🌐 விண்ணப்ப முறை: Online மூலம் மட்டும்
🎯 வெற்றிடங்கள்
242 வெற்றிடங்கள்
மத்திய மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளது.
🎯 வயதெல்லை
- குறைந்தபட்ச வயது – 18
- அதிகபட்ச வயது – 30
- வயது 16.10.2026 அன்று கணக்கிடப்படும்.
🎓 கல்வித் தகைமைகள்
- G.C.E. (O/L) – ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். இதில் மொழி மற்றும் கணிதம் உட்பட 4 Credit Pass இருக்க வேண்டும்.
- G.C.E. (A/L) – Common General Test தவிர்ந்த அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- தேவையான அனைத்து தகைமைகளும் 16.10.2026 அல்லது அதற்கு முன்னர் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
💰 சம்பளம்
ரூ. 48,470 – 82,800
📌 Salary Code: MN 02-2025
🏛️ நிரந்தரமானதும் ஓய்வூதிய உரிமையுடனான பதவி
🏛️ மாவட்ட அடிப்படையிலான தகைமை
விண்ணப்பதாரர்கள் ஒரு மாவட்டத்திற்கு மட்டும் போட்டியிட முடியும்.
- 🟦 கண்டி – மாவட்ட இல. 04
- 🟦 மாத்தளை – மாவட்ட இல. 05
- 🟦 நுவரெலியா – மாவட்ட இல. 06
தேர்ந்தெடுக்கப்படும் மாவட்டத்தில், விண்ணப்ப முடிவுத் தேதிக்கு முன்னைய 5 ஆண்டுகளில் குறைந்தது 3 தொடர்ச்சியான ஆண்டுகள் நிரந்தரமாக வசித்திருக்க வேண்டும்.
📚 பரீட்சைப் பாடங்கள்
| பாடம் | மதிப்பெண்கள் | நேரம் |
|---|---|---|
| மொழித் தேர்ச்சி | 100 | 2½ மணி |
| உளச்சார்பு | 100 | 1 மணி |
✔️ ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40%
✔️ மொத்தமாக குறைந்தது 50%
💳 பரீட்சைக் கட்டணம்
ரூ. 600.00
Online விண்ணப்பத்தில் வழங்கப்பட்டுள்ள கட்டண செலுத்தும் முறைகள் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்.
⚠️ முக்கிய விடயங்கள்
- தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் மத்திய மாகாணத்திற்குள் நியமிக்கப்படும் பணியிடத்தில் சேவையாற்ற வேண்டும்.
- முதலில் நியமிக்கப்படும் பணியிடத்தில் பொதுவாக குறைந்தது 5 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும்.
- இந்தப் பதவி நிரந்தரமானதும் ஓய்வூதிய உரிமையுடனானதுமாகும்.
🌐 அதிகாரப்பூர்வ விண்ணப்ப இணையதளம்
இலங்கை பரீட்சைகள் திணைக்களம்
www.doenets.lk
🔴 விண்ணப்ப முடிவு: 16.10.2026 – இரவு 9.00 மணி
| Central Province MSO வழிகாட்டல் வட்ஸ்அப் குழுவில் இணைய | Click here |
| Download PDF | Click here |