Open Competitive Examination for the Recruitment to the post of Grade III of Examination Data Assistant (Tamil Details)

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் – வேலைவாய்ப்பு அறிவிப்பு 2026

புதிய வேலைவாய்ப்பு
23 வெற்றிடங்கள்

பதவி: முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமற்ற – பிரிவு 2) சேவைத் தொகுதியின் பரீட்சைத் தரவு உதவியாளர் – தரம் III.

இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தில் நிலவும் 23 வெற்றிடங்களை நிரப்புவதற்காக திறந்த போட்டிப் பரீட்சை மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

1. அடிப்படைத் தகைமைகள்

  • இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.

  • வயது 18 – 35 வரை.

  • கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (O/L) ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

  • கணிதம், சிங்களம் / தமிழ் / ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி அவசியம்.

  • உயர்தரப் பரீட்சையில் (A/L) குறைந்தது ஒரு பாடத்தில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுப் பரீட்சை தவிர)

  • கணினி / தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத் துறையில் NVQ Level 3 அல்லது அதற்கு இணையான தகைமை.

  • கணினி தரவு உள்ளீட்டுப் பணியில் குறைந்தது 6 மாத அனுபவம்.

2. பரீட்சை விபரங்கள்

விபரம்தகவல்
பரீட்சைதிறந்த போட்டிப் பரீட்சை
மொழிமூலம்தமிழ் / சிங்களம்
பரீட்சை நடைபெறும் இடம்கொழும்பு
பரீட்சை நடைபெறும் காலம்பெப்ரவரி 2027
பரீட்சைக் கட்டணம்ரூ.600
வெற்றிடங்கள்23

3. பரீட்சைப் பாடத்திட்டம்

எழுத்துப் பரீட்சை

  • கணினி அறிவு (Computer Literacy)

  • காலம்: 2 மணித்தியாலங்கள்

  • மொத்தப் புள்ளிகள்: 100

  • சித்தியடைய வேண்டிய புள்ளிகள்: 40%

எழுத்துப் பரீட்சையில் சித்தியடையும் அதிகூடிய புள்ளிகளைப் பெறும் விண்ணப்பதாரர்களில் இருந்து வெற்றிடங்களின் இரு மடங்கு எண்ணிக்கையினர் கட்டமைக்கப்பட்ட நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்படுவர்.

நேர்முகப் பரீட்சை மற்றும் செய்முறைப் பரீட்சை

  • மேலதிக கல்வித் தகைமைகள் – 30 புள்ளிகள்

  • மேலதிக தொழில்சார் தகைமைகள் – 35 புள்ளிகள்

  • நேர்முகப் பரீட்சையில் வெளிப்படுத்தும் திறன்கள் – 5 புள்ளிகள்

  • தட்டச்சுத் திறன் செய்முறைப் பரீட்சை – 30 புள்ளிகள்

4. சம்பளம் மற்றும் நியமனம்

  • ஆரம்ப சம்பளம்: ரூ.45,230

  • சம்பள அளவுத்திட்டம்: ரூ.45,230 – 78,360

  • நிரந்தர நியமனம்.

  • ஓய்வூதிய உரிமையுடன் கூடிய பதவி.

  • 3 வருட பரீட்சார்த்த காலம்.

5. விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பங்கள் Online மூலம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

  • விண்ணப்பப் படிவத்தை ஆங்கில மொழியில் பூர்த்தி செய்ய வேண்டும்.

  • பரீட்சைக் கட்டணம் ரூ.600.

விண்ணப்பம் ஆரம்பம்

விண்ணப்பிக்கும் காலம்:

  • ஆரம்பத் திகதி: 26.10.2026 – காலை 9.00

  • இறுதித் திகதி: 20.11.2026 – இரவு 9.00

விண்ணப்ப இணையத்தளம்:

Department of Examinations – Official Website

 

Our Services → Online Applications – Recruitment / E.B. Exams

முக்கிய குறிப்பு: விண்ணப்பிக்கும் இறுதித் திகதியான 20.11.2026 அன்று அல்லது அதற்கு முன்னர் அனைத்து தகைமைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இதுவரை தமிழ் வர்த்தமானி அறிவித்தல் வெளிவரவில்லை. வெளிவந்ததும் உடனடியாக பகிர்கிறோம்.

Gazette Sinhala (pdf)Click here