Excise Inspector Vacancies (Open Competitive Exam) – Department of Excise

Excise Inspector Vacancies (Open Competitive Exam) – Department of Excise

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் மதுவரி பரிசோதகர் (Excise Inspector) பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026

இலங்கை கலால் திணைக்களத்தில் மதுவரி பரிசோதகர் (Inspector of Excise) பதவியில் காணப்படும் 54 வெற்றிடங்களை நிரப்புவதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பதவி விபரங்கள்

  • பதவி: மதுவரி பரிசோதகர் (Inspector of Excise)

  • வெற்றிடங்கள்: 54

  • சம்பள அளவுத்திட்டம்: ரூ.63,070 – ரூ.91,630

  • வயது வரம்பு: 21–35 வயது (2026.12.07 அன்று)

  • திணைக்களத்தில் பணியாற்றும் பட்டதாரிகளுக்கு வயது வரம்பு இல்லை.

கல்வித் தகைமைகள்

  1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது பட்டம் வழங்கும் நிறுவனத்திலிருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

  2. க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் திறமைச் சித்தி பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகைமைகள்

  • குறைந்தபட்ச உயரம்: 5 அடி 6 அங்குலம்.

  • மார்பளவு: மூச்சை வெளியே விடாத நிலையில் 33 அங்குலம்.

  • குறிப்பிட்ட பார்வைத் தகைமைகள் மற்றும் உடல், மன ஆரோக்கியம் அவசியம்.

பரீட்சை முறை

எழுத்துப் போட்டிப் பரீட்சையில் இரண்டு வினாத்தாள்கள் இடம்பெறும்:

வினாத்தாள்நேரம்மொத்தப் புள்ளிகள்
நுண்ணறிவுத் திறன் (Aptitude)1 மணி100
பொது அறிவு (General Paper)1 மணி100

ஒவ்வொரு வினாத்தாளிலும் சித்தியடைய 40% புள்ளிகள் பெற வேண்டும்.

நேர்முகத் தேர்வு: எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் திறமை மதிப்பீட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். கல்வி, மொழித் திறன், விளையாட்டுத் திறன் மற்றும் ஏனைய திறமைகளுக்கு மொத்தம் 100 புள்ளிகள் வழங்கப்படும்.

பயிற்சிக் காலம்: 3 மாதங்கள். பயிற்சிக் காலத்தில் மாதாந்தம் ரூ.20,000 கொடுப்பனவு வழங்கப்படும். அதன் பின்னர் 3 வருட பரீட்சார்த்த காலம் அமையும்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பங்கள் இணையவழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

  • விண்ணப்ப மொழி: ஆங்கிலம்.

  • பரீட்சைக் கட்டணம்: ரூ.1,200.

  • விண்ணப்பங்கள் ஆரம்பம்: 09.11.2026 காலை 9.00 மணி.

  • விண்ணப்ப முடிவுத் திகதி: 07.12.2026 இரவு 9.00 மணி.

பரீட்சை நடைபெறும் காலம்: 2027 பெப்ரவரி மாதம் கொழும்பில் நடைபெறும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்னர் 2026.11.06 வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தலை முழுமையாகப் படிக்கவும்.

தமிழ் வர்த்தமானி அறிவித்தல் இன்னும் வெளியாகவில்லை. வெளியானதும் நமது கீழ் உள்ள வட்ஸ்அப் குழுவில் பதிவிடப்படும் மாணவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.
மதுவரி பரீட்சை வட்ஸ்அப் குழுவில் இணையClick here
Download Sinhala GazetteClick here