Aswesuma Updated Name List 2026 – Welfare Benefits Programme

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளின் பெயர் விபரங்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் ‘மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள்’ மற்றும் ‘வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்கள்’ ஆகிய இரு பிரிவுகளுக்கு மட்டுமே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

உங்கள் பெயர் உள்ளதா என்பதை ஆன்லைனில் சரிபார்க்கும் படிமுறைகள்

கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணைப்பை கிளிக் செய்யவும்

அங்கு உங்கள் மாவட்டத் தேர்வை மற்றும் பிரதேச செயலகப் பிரிவை சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்ததாக உங்கள் கிராம நிலதாரி பிரிவை தேர்வு செய்யவும்.

திரையில் தோன்றும் பட்டியலில் உங்கள் தேசிய அடையாள அட்டை எண் (NIC Number) அல்லது பெயரைத் தேடிச் சரிபார்க்கலாம்.

திரையில் தோன்றும் தகவல்களை எவ்வாறு புரிந்துகொள்வது?

தெரிவு செய்யப்பட்டிருந்தால் (Selected): உங்கள் பெயருக்கு அருகில் “Eligible / Eligible Category” (தகுதியானவர்) எனக் குறிப்பிடப்பட்டு, உங்களுக்கான பிரிவு (எ.கா: Extremely Poor அல்லது Poor) காட்டப்படும்.

தெரிவு செய்யப்படாவிட்டால் / தற்காலிகமாக நீக்கப்பட்டிருந்தால் : “Non-Eligible” அல்லது உங்களுக்கான கொடுப்பனவு பிரிவு எதுவும் குறிப்பிடப்படாமல் இருக்கும்.

நிராகரிக்கப்பட்டிருந்தால் : “Rejected” எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பட்டியலில் பெயர் இல்லையென்றால் மேன்முறையீடு செய்வது எப்படி?

உங்கள் பெயர் பட்டியலில் இல்லாமலோ அல்லது நீங்கள் தகுதியான பிரிவில் சேர்க்கப்படவில்லை என்று கருதினாலோ, உடனடியாக மேன்முறையீடு செய்ய முடியும்.

ஆன்லைன் மூலமாக: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள மேன்முறையீட்டுப் பிரிவுக்குச் சென்று உங்கள் விபரங்களைச் சமர்ப்பிக்கலாம்.

நேரடியாக: உங்கள் பிரதேச செயலகத்திற்குச் சென்று, அதற்கான படிவத்தைப் பெற்றுப் பூர்த்தி செய்து, உரிய காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

தவறான நபர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பின், அவர்கள் மீதான ஆட்சேபனைகளையும் பிரதேச செயலகத்தில் பதிவு செய்ய முடியும்.

முக்கிய குறிப்பு: மேன்முறையீடு செய்வதற்கு குறிப்பிட்ட கால அவகாசம் மட்டுமே வழங்கப்படும் என்பதால், தாமதிக்காமல் உடனே உங்கள் பெயரைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

Check Name List – Online 2025 (2026)Click here
Re-Appeal form (pdf)Click here
Online  Form – AppealsClick here