239 MSO Vacancies (Open Exam) 2026 – North Western Province (Tamil Gazette)

239 MSO Vacancies (Open Exam) 2026 – North Western Province

வடமேல் மாகாண முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் III) திறந்த போட்டிப் பரீட்சை – 2026

வடமேல் மாகாண சபையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிகளுக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

2026.10.30 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் அடிப்படையில் இப்பரீட்சைக்கான முக்கிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

🔴 முக்கிய விபரங்கள்

  • பதவி: முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் (தரம் III)
  • மாகாணம்: வடமேல் மாகாணம்
  • வெற்றிடங்கள்: 239
  • ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை
  • பரீட்சை நடைபெறும் காலம்: 2026 டிசம்பர்
  • விண்ணப்பங்கள் ஆரம்பம்: 2026.11.02 காலை 09.00 மணி
  • விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.11.15 இரவு 09.00 மணி
  • பரீட்சைக் கட்டணம்: ரூ. 600/-

📌 கல்வித் தகைமைகள்

க.பொ.த சாதாரண தரம் (O/L):

  • ஒரே தடவையில் 6 பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
  • தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் மற்றும் கணிதம் உள்ளிட்ட 4 பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.

க.பொ.த உயர்தரம் (A/L):

  • பொது ஆங்கிலம் மற்றும் பொது அறிவுப் பரீட்சை தவிர்ந்த ஏனைய அனைத்து பாடங்களிலும் ஒரே தடவையில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
  • பழைய பாடத்திட்டத்தின் கீழ் 3 பாடங்களில் ஒரே தடவையில் சித்தியடைந்திருப்பது போதுமானது.

📌 வயதெல்லை மற்றும் ஏனைய தகைமைகள்

  • குறைந்தபட்ச வயது – 18
  • அதிகபட்ச வயது – 30
  • விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் வடமேல் மாகாணத்தில் குறைந்தது 3 வருடங்கள் நிரந்தரமாக வசித்த இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
  • நன்னடத்தை உடையவராக இருத்தல் வேண்டும்.

💰 சம்பள விபரம்

  • சம்பளக் குறியீடு: MN 02-2025
  • சம்பள அளவுத்திட்டம்: ரூ. 48,470 – 82,800
  • பதவி: நிரந்தரமானது
  • ஓய்வூதியம்: உரித்துடையது

📝 போட்டிப் பரீட்சை முறை

இப்பரீட்சை தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடைபெறும்.

பாடம்புள்ளிகள்நேரம்
மொழித்திறன்1002½ மணித்தியாலங்கள்
உளச்சார்பு (Aptitude)1001 மணித்தியாலம்
மொத்தம்200

மொழித்திறன்: கருத்து வெளிப்பாடு, மொழிப் புரிதல், எழுத்துப் பிழைகள், இலக்கணம், கட்டுரை, கடிதம் தயாரித்தல், தரவுகளின் அடிப்படையில் அட்டவணை மற்றும் வரைபடம் தயாரித்தல், சுருக்கம் எழுதுதல் போன்றவை இடம்பெறும்.

உளச்சார்பு (Aptitude): எண்ணியல் திறன், தர்க்க சிந்தனை மற்றும் பொது அறிவாற்றலை மதிப்பிடும் 50 வினாக்கள் இடம்பெறும்.

சித்தியடைவதற்கான குறைந்தபட்ச புள்ளிகள்:

  • ஒவ்வொரு பாடத்திலும் குறைந்தது 40% பெற வேண்டும்.
  • மொத்தப் புள்ளிகளில் குறைந்தது 50% பெற வேண்டும்.

📍 மாவட்ட அடிப்படையிலான ஆட்சேர்ப்பு

வடமேல் மாகாணத்தின் மாவட்ட சனத்தொகை விகிதாசார அடிப்படையில் வெற்றிடங்கள் ஒதுக்கப்படும்.

மாவட்ட அடிப்படையில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறித்த மாவட்டத்தில் கடந்த 5 வருடங்களுக்குள் குறைந்தது 3 வருடங்கள் தொடர்ச்சியாக நிரந்தரமாக வசித்திருக்க வேண்டும்.

  • குருநாகல் மாவட்டம்
  • புத்தளம் மாவட்டம்

முக்கியம்: ஒரு மாவட்டத்திற்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். தெரிவுசெய்த மாவட்டத்தைப் பின்னர் மாற்ற முடியாது. தேவையான சந்தர்ப்பத்தில் DS 04 வதிவிடச் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

🏙️ பரீட்சை நடைபெறும் நகரங்கள்

  1. குருநாகல்
  2. குளியாப்பிட்டி
  3. மஹவ
  4. சிலாபம்
  5. புத்தளம்

🌐 விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பங்கள் இணையவழியாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வ இணையத்தளம்:

https://www.doenets.lk/

Online விண்ணப்பத்தை ஆங்கில மொழியில் பூர்த்தி செய்ய வேண்டும். விண்ணப்பிப்பதற்கு முன்னர் பொதுவான அறிவுறுத்தல்களை வாசித்து அவற்றைப் பின்பற்ற வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2026.11.15 இரவு 09.00 மணி.

⚠️ முக்கிய அறிவிப்பு

இப்பரீட்சை ஒருங்கிணைந்த அரச சேவையின் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தரம் III திறந்த போட்டிப் பரீட்சையுடன் இணைந்து ஒரே பரீட்சையாக நடத்தப்படும்.

இரு சேவைகளுக்கும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தமது விருப்பத்தின் அடிப்படையில் ஒரு சேவையைத் தெரிவுசெய்ய முடியும்.

மேலும், தெரிவுசெய்யப்படும் விண்ணப்பதாரர்கள் வடமேல் மாகாணத்தின் தேவைக்கேற்ப எந்தவொரு சேவை நிலையத்திலும் பணியாற்ற வேண்டியிருக்கும்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்னர் முழுமையான வர்த்தமானி அறிவித்தலை வாசித்து தகைமைகள் மற்றும் நிபந்தனைகளை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தமிழ் வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்ததும் எமது MSO வட்ஸ்அப் குழுவில் பதிவிடப்படும்.

Join MSO WhatsApp GroupClick here