பாடசாலை விடுமுறை பற்றிய அறிவித்தல்
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் மூன்றாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகள் அனைத்துக்கும் இவ்வாறு விடுமுறை வழங்கப்படுவதுடன், உயர்தரப் பரீட்சை நிலையங்களாகச் செயல்படும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் நாளை முதல் விடுமுறை வழங்கப்படுகிறது.
அதற்கமைய, 2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் யாவும் நாளை வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்து, மீண்டும் பெப்ரவரி 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை (ஜனவரி-23) ஆரம்பமாகி, பெப்ரவரி 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.