“இன்றைய தினம் (17.04.2023) அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு, அதற்குப் பதிலாக மற்றொரு திகதியில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறும்” என்ற செய்தியொன்று, சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருவதாக, கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
இவ்வாறு, பாடசாலை விடுமுறை சம்பந்தமாகப் பகிரப்படுகின்ற செய்தியானது, முற்றிலும் ஒரு வதந்தியாகும் என்று அவர் தெரிவித்தார்.
ஆகவே, இன்று (17.04.2023) அரச பாடசாலைகளில் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் வழமைபோல நடைபெறும் என்றும், மாணவர்கள் கட்டாயம் சமூகமளிக்கவும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். எனவே, புத்தாண்டு விடுமுறையின் பின்னர், சிங்கள மற்றும் தமிழ் அரச பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்படவுள்ளன.
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கு நோன்பு விடுமுறைக்கு பின்னர், எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
🌐 எமது வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.