இலங்கையில் அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் ஏற்படப்போகும் மாற்றம்!
உத்தேச கல்வி சீர்திருத்தத்தின் கீழ், அடுத்த ஆண்டிலிருந்து தரம் – 01 முதல் மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வியை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கமைய, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து, இலங்கையில் உள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் தரம் – 01 முதல் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். தற்போது பாடசாலைகளில் தரம் – 3 முதல் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.