National College of Education Interview

Polish 20230114 104124238 2

2019 மற்றும் 2020 உயர் தர மாணவர்களை கல்வியியல் கல்லூரிகளில் ஆட்சேர்த்துக் கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை எதிர்வரும் ஜனவரி – 23 முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2022.07.22 அன்று கோரப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதியான மாணவர்களை, உரிய பாடநெறிக்காகத் தேர்வு செய்வதற்காக இந்த நேர்முகப்பரீட்சை நடைபெறுகின்றது.

இது சம்பந்தமான கடிதங்களை தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பும் பணிகளை கல்வி அமைச்சு தற்போது ஆரம்பித்துள்ளது.

இம்முறை 2019 மற்றும் 2020 என இரு ஆண்டுகளுக்கான மாணவர் குழுக்களை இம்முறை ஒரே முறையில் உள்ளீர்ப்புச் செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சைகள் வெவ்வேறு கல்வியியல் கல்லூரிகளில் இடம்பெறவுள்ளன.