இலங்கை சுங்கத் திணைக்களம் – திறந்த போட்டிப் பரீட்சை 2026
உதவி சுங்க அத்தியட்சகர் (தரம் II) – Assistant Superintendent of Customs (ASC)
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் உதவி சுங்க அத்தியட்சகர் (ASC) பதவிக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. தகுதியான இலங்கைப் பிரஜைகளிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முக்கிய தகவல்கள்
பதவி: Assistant Superintendent of Customs (ASC)
சம்பளம்: ரூ. 110,570/- வரை
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டம்
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டும்
விண்ணப்ப ஆரம்பம்: 11.05.2026 காலை 9.00
முடிவு திகதி: 08.06.2026 இரவு 9.00
பரீட்சை நடைபெறும் இடம்: கொழும்பு
பரீட்சை மாதம்: ஆகஸ்ட் 2026
வயது வரம்பு
21 வயதுக்கு குறையாமல்
35 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதிகள்
விண்ணப்பதாரர்கள் கீழ்கண்ட தகுதிகளை கொண்டிருக்க வேண்டும்:
குறைந்தது 3 ஆண்டுகள் படிப்பு காலமுள்ள பட்டப்படிப்பு
G.C.E O/L இல் ஆங்கிலத்தில் Credit அல்லது
G.C.E A/L இல் ஆங்கிலத்தில் சாதாரண தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
உடல் தகுதி
ஆண்கள்:
உயரம் குறைந்தது 5’5’’
மார்பு 33’’ அல்லது அதற்கு மேல்
பெண்கள்:
உயரம் குறைந்தது 5’3’’
பரீட்சை அமைப்பு
திறனறிவு (Aptitude) – 100 மதிப்பெண்கள்
ஆங்கில மொழி – 100 மதிப்பெண்கள்
ஒவ்வொரு வினாத்தாளிலும் குறைந்தது 50% பெற வேண்டும்.
சேவை நிபந்தனைகள்
3 ஆண்டுகள் பரிசோதனை காலம்
இரவு மற்றும் பகல் கடமைகளில் ஈடுபட வேண்டியிருக்கும்
இலங்கையின் எங்கும் சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
ரூ. 1000/-
ஆன்லைன் அல்லது வங்கி வழியாக செலுத்தலாம்.
தேவையான ஆவணங்கள்
பிறப்புச் சான்றிதழ்
தேசிய அடையாள அட்டை
கல்விச் சான்றிதழ்கள்
நல்லொழுக்கச் சான்றிதழ்
விளையாட்டு சாதனைச் சான்றிதழ்கள் (இருந்தால்)
| உதவி சுங்க அத்தியட்சகர் போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வட்ஸ்அப் குழு | Click here |