23,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சைகள் நிறைவடைந்துள்ளதுடன், தற்போது பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, 2026 பட்டதாரி ஆசிரியர் ஆட்சேர்ப்புப் பரீட்சையில் பங்கேற்றவர்கள் பெறுபேறுகளின் வெளியீட்டை எதிர்பார்த்து வருகின்றனர். பெறுபேறுகள் வெளியானதைத் தொடர்ந்து, தகுதியான பரீட்சார்த்திகள் நேர்முகப் பரீட்சை மற்றும் ஆவணச் சரிபார்ப்பு போன்ற அடுத்தகட்ட நடவடிக்கைகளில் பங்கேற்க அழைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
| MSO போட்டிப் பரீட்சை வழிகாட்டல் வட்ஸ்அப் குழுவில் இணைய | Click here |
