நீங்கள் இயற்கையை விரும்பும் ஒரு புகைப்படக் கலைஞரா??
அவ்வாறாயின், இந்த அழைப்பிதழ் உங்களுக்கானதாகும்!
#EarthDay2023 ஐக் கொண்டாட, அமெரிக்கத் தூதரகம் இந்த ஆண்டு வருடாந்த புகைப்படப் போட்டியை நடாத்துகின்றது.
இலங்கை நாட்டின் அற்புதமான மற்றும் ஆச்சரியமான தாவர மற்றும் விலங்கினங்கள் உள்ளிட்ட இலங்கையின் வசீகரிக்கும் சூழற்தொகுதிகளை காண்பிக்கக்கூடிய மிகச்சிறந்த புகைப்படங்களை அனுப்புமாறு அனைத்து ஆர்வமுள்ள புகைப்படக் கலைஞர்களுக்கும் அமெரிக்கத் தூதரகம் அழைப்பு விடுக்கின்றது.
உங்கள் புகைப்படங்கள் 2023.04.18 ஆம் திகதி 23:59 (IST) மணிக்கு அல்லது அதற்கு முன்னர் கிடைக்கக்கூடிய வண்ணம் ColomboContest@state.gov என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
போட்டி விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதை உறுதிசெய்யவும், வயது வந்தோர், இளம் வயது வந்தோர், இளைஞர்கள் மற்றும் கையடக்கக் கருவி எனும் ஒவ்வொரு பிரிவுக்கும் உரிய சிறந்த புகைப்படங்களைத் தெரிவு செய்வதற்கும், அனுப்பி வைக்கப்படுகின்ற அனைத்துப் புகைப்படங்களும் எமது தேர்வுக் குழுவினால் மீளாய்வு செய்யப்படும்.
ஒவ்வொரு பிரிவிலிருந்தும் தெரிவு செய்யப்படுகின்ற முதல் நான்கு நுழைவுகளிலிருந்து, உங்களுக்குப் பிடித்தமான புகைப்படத்திற்கு நீங்கள் வாக்களிக்க ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை அமெரிக்க தூதரகத்தின் Facebook பக்கத்தில் பதிவிடப்படும். போட்டி விதிகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பில் மேலும் அறிய, அமெரிக்க தூதரகத்தின் இணையத்தளத்தினைப் பார்வையிடுங்கள்.
More Details (Official Website) | CLICK HERE |
Join Our WhatsApp Group | CLICK HERE |