SYSTEM CHANGE: O/L EXAM IN GRADE 10?
தரம் – 10 இல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், 17 வயதில் ஒரு மாணவன் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த இன்று (22) தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே, கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பான பிரேரணை விரைவில் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அத்தோடு, நான்கு வயதைப் பூர்த்தி செய்த பிள்ளைகளை கட்டாயம் முன்பள்ளியில் சேர்த்துக்கொள்வது தொடர்பான விடயமும் இப்பிரேரணையில் உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
▪️புதிய கல்விச் சீர்திருத்தம் பற்றிய செய்தி: Click here (இங்கே கிளிக் செய்யுங்கள்)