Power Cut Schedule – Full Details

நாட்டில் தினசரி நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக மின்வெட்டு இன்றுமுதல் (14.02.2025) நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேவைப்படின் மாத்திரம் முன்னறிவித்தலுடன் மின்வெட்டு இடம்பெறும் என்றும் மின்வலு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நுரைச்சோலையின் (Lakvijaya Power Plant) நிலைமையைக் கருத்தில் கொண்டு, மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா, இல்லையா என்கின்ற முடிவு எடுக்கப்படும் என நேற்றைய தினம் (13.02.2025) அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு இன்று முதல் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.