NO NEW RECRUITMENTS
எதிர்காலத்தில் அரச சேவையில் மிகவும் அத்தியாவசியமான துறைகளைத் தவிர, வேறு எந்த ஒரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெற மாட்டாது என்று அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொதுப் பணித்துறை அரசாங்கத்துக்கு மிகப் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“நாட்டின் சனத்தொகை 21 மில்லியன் ஆகும். நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்கள் காணப்படுகின்றனர். மொத்த மக்கள் தொகையில் சுமார் 12 பேருக்கு ஒரு அரச ஊழியர் வீதம் என்ற வகையில் உள்ளது. இது உலகில் மிகவும் உயர்ந்த அரச ஊழியர் விகிதங்களில் ஒன்றாகும். இது மிகப்பெரும் சுமையாக உள்ளமையால், தொடர்ந்து அதனை மேற்கொள்ள முடியாது” என்றார்.
எனவே, அத்தியாவசியமான துறைகளைத் தவிர, வேறு எந்த ஒரு அரச துறையிலும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெற மாட்டாது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.