அரச பணியாளர்கள் அனைவருக்குமான புதிய சுற்றறிக்கை!
அரச சேவையில் பணி புரியும் ஆண், பெண் அனைவரும் சேவையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஆடை அணிவது தொடர்பிலான புதிய சுற்றறிக்கை பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கையின் படி, ஆண்கள் சட்டை அல்லது நீள் கால்சட்டை அல்லது தேசிய உடையை அணிய வேண்டும்.
அதே வேளை பெண்கள் புடவைகள், கண்டியன் (ஓசாரி) அல்லது வேறு பொருத்தமான மற்றும் அடக்கமான ஆடைகளை அணிய வேண்டும்.
அதேவேளை பாராளுமன்றம், நீதிமன்றம், தேசிய அல்லது சர்வதேச மாநாடுகள் மற்றும் விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆடை அல்லது தேசிய ஆடையை அணிய வேண்டும் எனவும் அச்சுற்றறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.