தலைப்பு: உயிரைக் கொல்லும் போதைப்பொருள்
வயது வரம்பின்றி அனைவரும் இப்போட்டியில் பங்கு கொள்ளலாம்.
நிபந்தனைகள்
01. குறுந்திரைப்படம் தமிழில் அமைதல் வேண்டும். தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கலாம்.
02. குறுந்திரைப்படமானது 15 நிமிடங்களுக்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.
03. தனிப்பட்ட நபரையோ அல்லது மதத்தையோ தாக்குவதாக இருத்தல் கூடாது.
04. ஆவணப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
04. இலங்கையில் உள்ளோர் மாத்திரம் பங்குபற்றலாம்.
05. குறுந்திரைப் படத்துக்குப் பயன்படுத்திய தொலைபேசி வகையைக் குறிப்பிடுதல் வேண்டும்.
06. உங்களால் எடுக்கப்பட்ட குறுந்திரைப்படமானது வேறு எந்த சமூக வலைத்தளங்களிலும் வெளியிடப்படாததாக இருத்தல் வேண்டும்.
07. அத்துடன், படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சாட்சிகளாக இணைக்கப்பட வேண்டும்.
08. குறுந்திரைப்படங்கள் HD (1080) தரத்தில் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
09. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதாகும்
10. குறுந்திரைப்படங்கள் 07.03.2023 ஆம் திகதிக்கு முன்னர் kuviyam.lk@gmail.com எனும் மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு: 0771777434