அனைத்து சட்டக்கல்லூரி பரீட்சை களையும் ஆங்கில மொழியில் மாத்திரம் நடாத்துவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், இன்று மதியம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.
சட்டக்கல்லூரியில் கற்கும் பெரும்பான்மையான மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு பல தரப்பினரும் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இது தொடர்பான பிரேரணை, இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதன்படி நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில், வர்த்தமானிக்கு எதிராக 113 வாக்குகளும், ஆதரவாக ஒரு வாக்கும் கிடைத்தது.
இதனையடுத்து, இனி சட்டக்கல்லூரி பரீட்சைகள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தொடர்ந்தும் நடைபெறவுள்ளன.
Join Our WhatsApp Group: Click here