Aswesuma New Update – Full Details

ASWESUME UPDATE (19.01.2024)

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்களைக் கோரல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படும் என்று பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று தெரிவித்தார்.

NEW BENEFICIARIES (18.01.2024)

ஏழு இலட்சம் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பரிசீலித்த பின்னர், மேலும் மூன்று இலட்சம் குடும்பங்கள் “அஸ்வெசும” நலன்புரி திட்டத்தில் புதிதாக நிவாரணத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 17 இலட்சத்தையும் தாண்டியுள்ளதாக பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த தவணை தொகை வழங்கப்படுவதற்கு முன்னர், ஜூலை முதல் டிசம்பர் வரையிலான தவணைகள் விரைவில் வங்கிகளுக்கு வைப்பிலிடப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

CHECK NAME LIST (ASWESUMA)