விடுதி உதவி மேற்பார்வையாளர் (Assistant Superintendent of Hostels) ஆட்சேர்ப்பு 2026 – கல்வி அமைச்சு
கல்வி அமைச்சின் கீழ் முகாமைத்துவ உதவியாளர் (தொழில்நுட்பமற்ற) சேவைப் பிரிவு 02, தரம் III விடுதி உதவி மேற்பார்வையாளர் பதவிக்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
📌 பதவி விபரங்கள்
- பதவி: Assistant Superintendent of Hostels – Grade III
- சேவை: Management Assistant (Non-Technical) – Segment 02
- ஆட்சேர்ப்பு முறை: திறந்த போட்டிப் பரீட்சை
- சம்பள அளவுத்திட்டம்: ரூ. 45,230 – 78,360
- விண்ணப்பக் கட்டணம்: ரூ. 600
- விண்ணப்ப முடிவுத் திகதி: 02.11.2026 இரவு 9.00 மணி
📌 வயதெல்லை
விண்ணப்ப முடிவுத் திகதியன்று 25 வயதுக்குக் குறையாமலும் 35 வயதுக்கு மேற்படாமலும் இருக்க வேண்டும்.
📌 கல்வித் தகைமைகள்
- இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
- க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் பொதுப் பரீட்சை மற்றும் பொது ஆங்கிலம் தவிர்ந்த குறைந்தது ஒரு பாடத்தில் சித்தியடைந்திருக்க வேண்டும்.
- க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஒரே தடவையில் ஆறு பாடங்களில் சித்தியடைந்திருக்க வேண்டும். அவற்றில் சிங்களம்/தமிழ்/ஆங்கிலம், கணிதம் மற்றும் மேலும் இரண்டு பாடங்களில் திறமைச் சித்தி (Credit Pass) பெற்றிருக்க வேண்டும்.
- சிறந்த நற்பண்பும், உடல் மற்றும் உள ஆரோக்கியமும் கொண்டிருக்க வேண்டும்.
📌 போட்டிப் பரீட்சை முறை
- பொது அறிவு – 100 புள்ளிகள் (1 மணித்தியாலம்)
- நுண்ணறிவுப் பரீட்சை (IQ) – 100 புள்ளிகள் (1 மணித்தியாலம்)
- தகைமை மதிப்பீட்டு நேர்முகப் பரீட்சை – 100 புள்ளிகள்
எழுத்துப் பரீட்சையின் பொது அறிவு மற்றும் நுண்ணறிவுப் பரீட்சை ஆகிய இரண்டிலும் தனித்தனியாக குறைந்தது 40 புள்ளிகளைப் பெற வேண்டும். பரீட்சை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் நடைபெறும்.
📌 விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ஊடாக ஒன்லைன் முறையில் மாத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்.
🔗 இணையத்தளம்: https://www.doenets.lk/
- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் காலம்: 05.10.2026 காலை 9.00 மணி முதல் 02.11.2026 இரவு 9.00 மணி வரை.
- ஒன்லைன் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதனைப் பதிவிறக்கம் செய்து தேவையான பகுதிகளைப் பூர்த்தி செய்து, கையொப்பத்தைச் சான்றுப்படுத்தி, விண்ணப்ப முடிவுத் திகதிக்குள் பதிவுத் தபால் மூலம் பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும்.
- ஒன்லைன் விண்ணப்பத்தை ஆங்கில மொழியில் மாத்திரமே பூர்த்தி செய்ய வேண்டும்.
⚠️ முக்கிய குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்னர், வயது, கல்வித் தகைமைகள், பரீட்சை நடைமுறைகள் மற்றும் ஏனைய நிபந்தனைகள் தொடர்பாக அதிகாரப்பூர்வ வர்த்தமானி அறிவித்தலை முழுமையாகப் படித்துப் பார்க்கவும்.
📄 முழுமையான வர்த்தமானி அறிவித்தல்: விண்ணப்பதாரர்கள் இணைக்கப்பட்டுள்ள PDF அறிவித்தலைப் பார்வையிடவும்.
தமிழ் வருத்தமான அறிவித்தல் இதுவரை வெளியாகவில்லை. வெளியானதும் எமது whatsapp குழுவில் பதிவிடப்படும். வாட்ஸ் அப் குழுவில் இல்லாதவர்கள் இணைந்து கொள்ளுங்கள்.
| உதவி விடுதி மேற்பார்வையாளர் பரீட்சை வழிகாட்டல் குழுவில் இணைய | Click here |
| English Gazette Pdf | Click here |