பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு ஆசிரியர் உதவியாளராக 2,535 பேர் நியமனம்! சில வாரங்களில் விசேட வர்த்தமானி வெளியீடு. மே மாதத்துக்குள் சேவையில் இணைப்பு!
பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களுக்குள் வெளியிடப்படவுள்ளதாக, கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
எதிர்வரும் மே மாதத்துக்குள் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்து, அவர்களுக்கு அடிப்படை பயிற்சியளித்த பின்னர், பாடசாலைகளுக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் சுசில் தெரிவித்தார்.
எமது MASTER வாட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ள… – Click here