தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சை நடைமுறையில் மாற்றம்!

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர்-18) இடம்பெறவுள்ள தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான சகல பணிகளும் தற்பொழுது தயார்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.

இம்முறை இடம்பெறவுள்ள தரம்-5 புலமைப்பரிசில் பரீட்சையில் பகுதி இரண்டின் (Part-2) வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படும் என்றும், அதன் பின்னரே பகுதி ஒன்று (Part-1) வினாப்பத்திரம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு வரை பகுதி ஒன்று (Part-1) வினாப்பத்திரமே முதலில் வழங்கப்பட்டு வந்தது. ஆயினும், நுண்ணறிவுகளைக் கொண்ட அப்பகுதியானது, சற்று கடினமானது என்பதால், பாடவிதானத்தை உள்ளடக்கிய பகுதி இரண்டு (Part-2) வினாப்பத்திரத்தை முதலில் வழங்குமாறு பல பெற்றோர்கள் கோரியுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கேற்ப, இம்முறை பகுதி இரண்டு (Part-2) வினாப்பத்திரமே முதலில் வழங்கப்படவுள்ளது.

Polish 20221216 152938867