நாட்டில் நிலவி வரும் அசாதாரண காலநிலை காரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை அனைத்துப் பாடசாலைகளுக்கும் சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டது.
இவ்வாறு மூடப்பட்ட பாடசாலைகளை மீண்டும் நாளை திறப்பது தொடர்பாக, இதுவரை எந்தத் தீர்மானமும் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சு சற்றுமுன் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகிய நிறுவனங்களுடன் கலந்துரையாடி, பாடசாலைகளை திறப்பது தொடர்பிலான இறுதித் தீர்மானம் இன்று எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான தீர்மானம் என்று அறிவிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.