நாளை (24.04.2023) நாடளாவிய ரீதியில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும்
கற்றல், கற்பித்தல்
செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
நோன்பு விடுமுறைக்காக மூடப்பட்ட முஸ்லிம் பாடசாலைகள் அனைத்தும் நாளை மீண்டும் திறக்கப்படவுள்ளது. எனவே, அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நாளை முதல் வழமைபோல் தவறாது பாடசாலைக்கு சமூகம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
நாளை ஆரம்பமாகும் முஸ்லிம் பாடசாலைகளின் தவணை, மே-29 ஆம் திகதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், எதிர்வரும் மே 29 இல் ஆரம்பமாகும் 2022 (2023) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது, ஜூன் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.