வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு எதிர்வரும் மே – 04, 05, 06 ஆம் திகதிகளில் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அச்செய்தியானது வெறும் வதந்தியாகும்.
நாளை விடுமுறை தொடர்பாக எந்த உத்தியோகபூர்வ அறிவித்தலும் கல்வி அமைச்சினால் விடுக்கப்படவில்லை. ஆகவே, நாளை வழமை போல் பாடசாலை நடைபெறும் என்றும் மாணவர்கள் தவறாது பாடசாலைக்கு வருமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அத்துடன், எதிர்வரும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்கள் விடுமுறை தினங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
WhatsApp Group | Join Now |
Telegram Group | Join Now |
Facebook Page | Join Now |