நாளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – வெளியான அறிவிப்பு!

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் நாளை (15) காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை பரீட்சை நிலையங்களைச் சுற்றி ஒலிபெருக்கிகளை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) அறிவித்துள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

இவ்வருடம் ஐந்தாம் தரப் பரீட்சைக்கு முந்நூற்று இருபத்து ஆயிரத்து எண்ணூற்று எழுபத்தி ஒன்பத மாணவர்கள் தோற்றவுள்ளதோடு நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது.

பரீட்சைக்கு பேனா பயன்படுத்தினால் கருப்பு அல்லது நீல நிற பேனாவையே பயன்படுத்த வேண்டும் என்றும் வேறு நிறங்கள் பயன்படுத்தக்கூடாது என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சிறுவர்கள் பென்சிலை பயன்படுத்தினால் அதற்கு தடையில்லை எனவும், பென்சிலால் எழுதும் பிள்ளைகள் சில பென்சில்களை எடுத்து வருமாறும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்வு மையத்திற்கு அழிப்பான், மற்றும் தண்ணீர் போத்தல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
மேலும், ஸ்மார்ட் கைக்கடிகாரங்கள் மற்றும் கோப்பு அட்டைகளை தேர்வு மையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Grade 5 Scholarship Exam Time TableClick here