கல்வியியல் கல்லூரிகளில் ஆசிரியர் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த தமிழ் மொழி மூல ஆசிரியர்களை, நாடளாவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, ஆசிரியர்களை அவரவர் சொந்த மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் நியமிப்பதில் சில சிக்கல்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், செய்தியாளர்களை சந்தித்த போதே, இவ்வாறு தெரிவித்தார்.
அதேவேளை கல்வியியல் கல்லூரிகளை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு, இம்மாத இறுதிக்குள் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் கடந்த வாரம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
WhatsApp Group | Join Now |
Telegram Group | Join Now |
Facebook Page | Join Now |