இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரிகளுக்குப் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை நிறைவு செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, மாணவர்களுக்காக கல்வி அமைச்சு வழங்கும் 5,000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் தொழில்களைப் பெற்றுக் கொண்ட பின்னர் மீளச் செலுத்தும் அடிப்படையில் வங்கிகள் மூலம் வழங்கப்படும் 15,000 ரூபாய் கடனையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மற்றும், கல்வியியல் கல்லூரிகளுக்குப் புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடந்த ஜனவரி மாதம் நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டன.
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் Z புள்ளிக்கு அமைய மற்றும் விடய தானங்களுக்கு ஏற்ப, திறமை அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவர்களுக்கு நேர்முகப் பரீட்சை நடாத்தப்பட்டுள்ளது.
எனினும் சிலர் மேன்முறையீடு செய்துள்ளனர். அதனால்தான் சற்று தாமதம் ஏற்படுகிறது. எனினும், இம்மாத இறுதிக்குள் கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படும்.
மேலும், ஆசிரியர் கல்விச் சேவையில் 60 வீதமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. இது கடந்த 03 வருடங்களாக நிலவும் பிரச்சினையாகும். எனினும், கடந்த வாரத்தில் அதற்காக நியமிக்கப்பட்ட உப குழுவின் அனுமதி கிடைத்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. அதற்கான பெறுபேறுகளும் வெளியிடப் படவுள்ளன என்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜெயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
WhatsApp Group | Join Now |
Telegram Group | Join Now |
Facebook Page | Join Now |