தற்போது நடைபெறும் விடைத்தாள் மதிப்பீடுகள் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக, இந்த ஆண்டு இடம்பெறவுள்ள உயர்தரப் பரீட்சைகள் தாமதமாகலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
உயர்தரப் பரீட்சையின் தாமதமானது, ஏனைய மற்ற பரீட்சைகளையும் தாமதப்படுத்தும் ஐயம் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
சுமார் 02 மாதங்கள் உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகளைத் திருத்துவதில் ஏற்பட்ட தாமதத்தினால், பரீட்சைப் பெறுபேறுகளை வெளியிடுவதும் சற்றுத் தாமதமடையும் என்றும், மேலும் இந்த ஆண்டு உயர் தரப் பரீட்சைக்கான புதிய விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதும் தாமதம் அடையும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், திட்டமிட்டபடி இந்த ஆண்டுக்கான உயர் தரப் பரீட்சையை ஒக்டோபர் மாதத்திற்குள் நடாத்துவது மிகவும் சவாலானது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
எனவே, பரீட்சைத் திருத்தத்தில் ஏற்பட்ட கால தாமதம் காரணமாக, தற்போதைக்கு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, இரண்டு வாரங்கள் ஒத்தி வைக்கப்பட்ட க.பொ.த சாதாரண தரப் பரீட்சையானது, எதிர்வரும் மே மாதம் – 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Join Our WhatsApp Group | Click here |