Certificate Course in Basic Sinhala – University of Jaffna

CERTIFICATE COURSE IN BASIC SINHALA – LEVEL 1

அடிப்படை சிங்கள சான்றிதழ் கற்கைநெறி – மட்டம் 1

அடிப்படை சிங்கள சான்றிதழ் கற்கைநெறி

 

நீங்கள் இரண்டாம் மொழி சிங்களத்தினை கற்பதில் ஆர்வம் கொண்டவரா? இதோ யாழ்ப்பாண பல்கலைக்கழகம் நடாத்தும் அடிப்படை சிங்கள மொழி சான்றிதழ் கற்கைநெறி!
யார் விண்ணப்பிக்கலாம்?
A/L பரீட்சைக்குத் தோற்றியோர், உயர் கல்விக்காகக் காத்திருப்போர், அரச மற்றும் தனியார் துறையில் பணிபுரிவோர், வங்கித் துறையினர், பாடசாலை விட்டு விலகியோர் அனைவரும் விண்ணப்பிக்கலாம். வயதெல்லை கிடையாது.
கற்கைநெறி உள்ளடக்கம்:
கீழ் வரும் திறன்களை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது.
  • வாசிப்பு
  • எழுத்துத் திறன்
  • கிரகிக்கும் திறன்
  • தொடர்பாடல் திறன்
கற்கை நெறி பற்றிய மேலதிக விபரங்கள்
  • காலம்: மூன்று மாதங்கள்
  • கட்டணம்: 12,000/-
  • விண்ணப்ப முடிவுத்திகதி: 30.09.2022
வகுப்புகள் வார இறுதிகளில் மாத்திரம் இடம்பெறும்.
வகுப்புகள் அனைத்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் நடாத்தப்படும்.
கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு பல்கலைக்கழகச் சான்றிதழ் வழங்கப்படும்.
விளம்பரம் மற்றும் விண்ணப்பத்திற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்.

CLICK HERE

For More Details:
Centre For Open And Distance Learning,
University of Jaffna.
Contact Number: 0212223612

தமிழ் பேசுபவர்கள் சிங்களம் கற்பதன் முக்கியத்துவம் (சிறு கட்டுரை)

மொழி என்பது ஒருவருடைய சிந்தனைகளையும், கருத்துக்களையும் இன்னுமொருவருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் மிகச் சிறந்த ஓர் ஊடகமாகும். இலங்கையில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும் பேசப்படுகின்றன. ஆயினும், இலங்கையில் பேசப்படுகின்ற பெரும்பான்மை மொழியாக சிங்களம் காணப்படுகின்றது. அதிலும் அரச மொழிகளாக தமிழ் மற்றும் சிங்களம் காணப்படினும், சிங்கள மொழியே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
 
சாதாரணமாக, ஒருவர் இலங்கையில் உள்ள எந்த ஒரு அரச அல்லது அரச சார்பற்ற அலுவலகத்திற்கு, நிறுவனத்திற்குச் சென்றாலும் சிங்களம் தெரியாவிட்டால் படும் பாடு மிகவும் கஷ்டமானது. நம்மில் பலரும் அதனை உணர்ந்திருப்பார்கள்.
எமது தமிழ் பேசுகின்ற பெரும்பாலான மாணவர்கள் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில், உயர் கல்வி நிறுவனங்களில் சிங்களம் தெரியாமையால், அங்கு எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் ஏராளம்.
ஏன் நமது நாட்டில் ஓடும் பேருந்துகளில் ஏறினால் கூட, சிங்கள மொழியின் தேவையை நாம் வெகு இலகுவாக உணர்ந்து கொள்ள முடியும். ஆகவே, தமிழ் பேசும் ஒவ்வொருவரும் சிங்கள மொழியினைத் தெரிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
இரு மொழிக் கற்கை தற்போது எமது நாட்டில் மிகவும் அவசியமான ஒன்றாகக் காணப்படுகின்றது. இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையிலான ஒற்றுமை, சகவாழ்வு, புரிந்துணர்வை மேம்படுத்துவதற்கு இரு மொழிக் கற்கையை செயல்படுத்துவது முக்கியமான ஒன்றாகும்.
மேலும் அரச உத்தியோகத்தர்கள் நாடு பூராகவும் கடமையாற்றுவதற்கு உறுதிப்பூண்டவர்கள். ஆகவே, அவர்கள் தங்களது தொழிலை செவ்வனே செய்வதற்கு மொழி ஒரு தடையாக இருந்து விடக் கூடாது. அத்துடன் ஏனையவர்களும் தமது வேலைகளைச் செய்து கொள்வதற்கு மொழி தடையாக இருக்கக் கூடாது.
சாதாரணமாக எமக்கு சிங்களம் தெரியாதவிடத்து, சில மொழிபெயர்ப்புகளை வாசிப்பினும், அந்த மொழிபெயர்ப்புகள் சில வேலைகளில் தடங்கல்களை ஏற்படுத்தலாம். அதன் காரணமாக, அவற்றினுடைய சரியான அர்த்தத்தை எங்களால் புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். ஆகவே, நாம் அம்மொழியினைக் கற்பதே அதற்கான மிகச் சிறந்த ஒரு தீர்வாகும்.
அத்துடன் மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலமாக, மற்ற சமூகத்தினுடைய பண்புகள், கலாச்சாரங்களை அதனுடன் சேர்ந்தே கற்றுக் கொள்வதால், அவை எங்களில் இயல்பாகவே ஒற்றுமையையும் சகவாழ்வையும் விதைக்கின்றது.
ஆகவே இலங்கையில் வாழ்கின்ற இனத்தவர்கள், இன்னும் ஒரு இனத்தினுடைய மொழியைக் கற்றுக் கொள்வது, முரண்பட்ட நமது சமூகத்திற்கு மத்தியில் மிகச் சிறந்த தொடர்பாடலை ஏற்படுத்தி, நம்மில் ஒற்றுமையை வளர்க்க வழிவகுக்கும்.
நம்மில் பலர் இரண்டாம் மொழியைக் கற்பதில் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். ஆகவே, இரண்டாம் மொழியைக் கற்பிப்பதில் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்வேறு வேலைத் திட்டங்களைச் செய்து வருகின்றன.
அந்த வகையில், தற்போது யாழ்ப்பாண பல்கலைக்கழகம் மூன்று மாத குறுகிய அடிப்படை சிங்கள கற்கைநெறியை நடாத்தவிருக்கின்றது. ஆகவே, இதில் நிச்சயம் நீங்கள் கலந்து கொண்டு, உங்கள் சிங்கள மொழித் திறனை விருத்தி செய்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *