Vocational Training Course – Full Details (Tamil)

Vocational training courses

க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்தவுடன் அந்த மாணவர்களுக்கான தொழிற்பயிற்சிப் பாட நெறிகளை விரைவில் ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகள் நிறைவு செய்த மாணவர்களுக்கே தொழிற்பயிற்சி நெறிகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கிந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகள் பரீட்சை நிறைவடைந்தவுடன், நாடளாவிய ரீதியில் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

50% க்கும் அதிகமான மாணவர்கள் தொழிற்பயிற்சி பாடநெறிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக
கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

View Also: 2023 A/L Exam Latest Update (Click here)