இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தமது டுவிட்டர் பக்கத்தில் நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை முன்பைப் போலவே வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அவருடைய டுவிட்டில்
647,683 பேருக்கு முன்பைப் போன்று கொடுப்பனவுகளை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், கூடிய விரைவில் அதற்கான பணம் செலுத்தப்பட உள்ளது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனவே காத்திருப்போர் பட்டியல் உட்பட, 517,962 பேருக்கு முதியோர் உதவித்தொகையும், 88,602 பேருக்கு விசேட தேவையுடையோருக்கான உதவித் தொகையும், 41,119 பேருக்கு சிறுநீரக நோயாளர் உதவித்தொகையும் வழங்கப்படவுள்ளது.
முதியோர் கொடுப்பனவு அஞ்சல் அலுவலகங்கள் ஊடாகவும், விசேட தேவையுடையோர் மற்றும் சிறுநீரக கொடுப்பனவுகள் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்கப்படவுள்ளன.
සුබසාධන ගෙවීම් සම්බන්ධයෙන් රාජ්ය අමාත්ය ෂෙහාන් සේමසිංහ මහතා සිය ට්විටර් ගිණුම ඔස්සේ විශේෂ නිවේදනයක් නිකුත් කර තිබේ.
මුදල් රාජ්ය අමාත්ය ෂෙහාන් සේමසිංහ මහතා පැවසුවේ වකුගඩු රෝගීන්, විශේෂ අවශ්යතා ඇති පුද්ගලයින් සහ අඩු ආදායම්ලාභී ජ්යෙෂ්ඨයින් සඳහා පෙර පරිදි දීමනා ලබාදීමට මුදල් වෙන්කර ඇති බවයි.
ඔහුගේ ට්වීට් එකේ
647,683 දෙනෙකුට පෙර පරිදිම ගෙවීම් ලබාදීමට මුදල් වෙන්කර ඇති බවත් එම ගෙවීම් කඩිනමින් සිදුකරන බවත් මුදල් රාජ්ය අමාත්ය ෂෙහාන් සේමසිංහ මහතා පැවසීය.
එබැවින් පොරොත්තු ලේඛනය ඇතුළු පුද්ගලයින් 517,962 දෙනෙකුට වැඩිහිටි දීමනාවද, පුද්ගලයින් 88,602 දෙනෙකුට විශේෂ අවශ්යතා දීමනාවද, 41,119 දෙනෙකුට වකුගඩු රෝග දීමනාවද හිමිවනු ඇත.
වැඩිහිටි දීමනාව තැපැල් කාර්යාල හරහාත්, විශේෂ අවශ්යතා සඳහා සහ වකුගඩු දීමනා ප්රාදේශීය ලේකම් කාර්යාල හරහාත් ලබාදීමට බොහෝ දුරට ඉඩ ඇත.
Join Our WhatsApp Group: Click here