Public Speaking Training – Free Course

PUBLIC SPEAKING TRAINING

 

PUBLIC SPEAKING TRAINING

 

Conducted by: American Corner – Jaffna 

  • Fee: Free
  • Duration: 10 Weeks
  • Closing Date: 13.09.2022
  • Class time:

Batch – 1: Saturdays (11 a.m. – 1:00 p.m.)

Batch – 2: Sundays (11 a.m. – 1:00 p.m)

 

Learn…..

To Motivate Others

To Speak with confidence

To Use professional vocabulary

To Conquer stage fear

 

For further details:

0212220665 / 0764426720

American Corner – Jaffna, 23, Athiyadi Road, Nallur, Jaffna.

 

பாடநெறி விபரம் (தமிழில்)

  • கட்டணம்: இலவசம்
  • விண்ணப்ப முடிவுத்திகதி: 13.09.2022
  • காலம்: 10 வாரங்கள்
  • பாடநெறி நேரம்:

பிரிவு – 1: சனிக்கிழமை (11 மு.ப. – 1:00 பி.ப.)

பிரிவு – 2: ஞாயிற்றுக்கிழமை (11 மு.ப. – 1:00 பி.ப.)

பாடநெறியை நடத்துவோர்: அமெரிக்கன் கார்னர் –  யாழ்ப்பாணம்

 

மேலதிக தொடர்புகளுக்கு:

அமெரிக்கன் கார்னர் – யாழ்ப்பாணம், 23, அத்தியடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம்.

 

இப்பாடநெறியைக் கற்பதன் ஊடாக, மேடை பயத்தை எம்மில் இருந்து அகற்றலாம். எம்மால் நம்பிக்கையுடன் பேச முடியும். மற்றவர்களை ஊக்குவிக்க முடியும். சிறந்த சொற்களஞ்சியங்களைப் பயன்படுத்த முடியும்.

 

இன்றே விண்ணப்பியுங்கள்!

(Apply here)

CLICK HERE

 

 

 

 

மேடைப் பேச்சு எவ்வாறு அமைய வேண்டும்? (சிறு கட்டுரை)

ஒருவருடைய தகவல் தொடர்பாடல் திறன் எவ்வாறு உள்ளது என்பதை வைத்தே ஒருவருடைய வாழ்க்கைத் தரம் தீர்மானிக்கப்படுகின்றது. இன்று பலரும் பல இடங்களிலே, பொது இடங்களிலே பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அலுவலகங்களில் பணி புரிகின்றவர்கள், அலுவலக சந்திப்புகளிலே பேச வேண்டி இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் பாடசாலைகளில் பேச வேண்டி இருக்கிறது. தலைவர்கள் தங்களது கூட்டங்களில் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. ஒவ்வொருவரும் இன்று ஏதோ ஒரு பொது இடத்தில் பேச வேண்டிய தேவை இருக்கிறது எனலாம்.

முதலில் நாம் பேச முற்படுகின்ற பொழுது, வெட்கம், பயம், கூச்சம் போன்ற காரணிகளை அப்புறப்படுத்தி விட வேண்டும். ஏனென்றால், பலருக்கு இவைதான் மிகப்பெரும் தடையாகக் காணப்படுகின்றன. இவற்றை அகற்றி விட்டால், எமது பேச்சு சிறப்பாக அமையும்.

பேச்சாளர்கள் முதலில் தாம் பேச வேண்டிய விடயம் பற்றிய அறிவுள்ளவர்களாக இருத்தல் வேண்டும். நாம் யாரிடம் பேசுகின்றோம், எமது பேச்சைக் கேட்பவர்கள் யார் என்பதை நன்கறிந்து நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எம்மை நோக்கி எவ்வாறான சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் வருகின்றன என்பதை அறிந்து அதற்குத் தகுந்த பதில்களை கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.

உங்களது பேச்சு எளிய நடையில் இருக்க வேண்டும். அனைவருக்கும் புரியும் படியாக அமைய வேண்டும். சில நகைச்சுவை ததும்பும் விதத்தில் இருக்கலாம். உணர்வுகளைத் தட்டி எழுப்பலாம். நீங்கள் பேசுகின்ற விடயம் அனைவருக்கும் புரியும் படியாக அமைதல் மிக முக்கியமானதாகும்.

மேடைப் பேச்சு என்பது ஒரு கலையாகும். நாம் ஒருமுறை பேசுவதற்கு முன்னர், அது தொடர்பில் கண்ணாடி முன் நின்று பேசி அதற்கான பயிற்சிகளைப் பெற வேண்டும். தற்போது அதற்காகக் கைத்தொலைபேசி இருக்கின்றது. அதில் கூட நாம் எமது பயிற்சிகளை செய்து பார்க்கலாம். மேடைக் கூச்சத்தை முற்றிலும் அகற்றிவிட்டால், நாம் மிகச் சிறந்த மேடைப் பேச்சாளராக உருவாக முடியும்.

இன்று பல பேச்சாளர்கள் தங்களது பேச்சுக்களில் பொன்மொழிகள், பழமொழிகள், அறிஞர் கூற்றுகள், கதைகள், நகைச்சுவைகள் என்று பல விடயங்களைப் பயன்படுத்துவர். மக்களுக்கு மிகவும் ஆர்வத்தை எழுப்பக் கூடியதாக அவை அமையும்.

பயனற்றதும் பண்பற்றுதுமான சொற்களை மேடைகளில் மற்றும் பொது இடங்களில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். நாம் பேசுகின்ற அனைத்து விடயங்களும் மற்றோருக்கு பயனுடையதாக அமைதல் வேண்டும்.

மேடையில் பேசுவதற்கென சில உடல் மொழிகளை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் பேசுகின்ற பொழுது தொடர்ந்து அசைந்து கொண்டிருக்க வேண்டும். அப்போதுதான் மேடைப்பேச்சு நிகழ்கின்றது என்று மற்றோர் புரிந்து கொள்வர். பேசுகின்ற பொழுது தேவைக்கேற்ற இடங்களில், கைகளைக் காட்டி, சொற்களில் ஏற்ற இறக்கத்தைப் பயன்படுத்திப் பேச வேண்டும். ஒரு சாராரை மட்டும் பார்த்துப் பேசாமல் அனைத்து சாராரையும் பார்த்துப் பேசுவதாக எமது பேச்சு அமைதல் வேண்டும். அப்போதுதான் அனைவரையும் எங்களை நோக்கி ஈர்த்தெடுக்க முடியும்.

மேடைப் பேச்சு என்பது ஒரு வகை நடிப்பாகும். தேவையான எல்லா உணர்வுகளையும் அங்கு நாம் கொண்டு வர வேண்டும்.

ஒருவர் பொது இடத்தில் அல்லது மேடையில் எவ்வாறு பேசுவது என்பது பற்றிய பல்வேறுபட்ட காணொளிகள் மற்றும் பதிவுகள் இணையத்தளங்களில் உள்ளன. அதில் இருந்து நாம் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ளலாம்.

 

தற்போது அமெரிக்கன் கார்னர் – யாழ்ப்பாணம் மேடைப்பேச்சு தொடர்பான கற்கைநெறியை உங்களுக்கு முன் கொண்டு வந்திருக்கின்றது. இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தவற விடாதீர்கள். நீங்களும் பயனடைந்து இதனை மற்றோருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *