இந்த ஆண்டு முச்சக்கர வண்டி (Auto) சாரதிகளுக்கு மேலதிக வாழ்வாதாரத்தை அறிமுகப்படுத்தும் முகமாக, பகுதி நேர வேலைவாய்ப்பு திட்டமொன்றிற்கு அரசு 05 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக ஹம்பாந்தோட்டையை இலக்காகக் கொண்டு 70 முச்சக்கர வண்டி சாரதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதனூடாக, முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு தேவையான பயிற்சி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நீர் குழாய் பராமரிப்பு, தச்சு, முடி வெட்டுதல், மின் பொறியியல் மற்றும் கட்டட ஓவியம் போன்ற தெரிவு செய்யப்பட்ட தொழில்களில் தொழில்சார் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
மற்றும் அதனூடாக மேலதிக வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கு தேவையான உபகரணங்களும் இதன் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ் வேலைத்திட்டம் தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுக்குத் தெரிவிக்கும் நிகழ்ச்சி அண்மையில் மாகம் ருஹுனுபுர நிர்வாக வளாகத்தில் நடைபெற்றது.
முக்கிய தகவல்களை அறிந்து கொள்ள எமது GK IQ MASTER வட்ஸ்அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்..
WhatsApp Group | Click here |
Telegram Group | Click here |