NVQ சான்றிதழ் கட்டாயம்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப் பணியாளர்களாகச் செல்லும் பெண்களுக்கு இன்று முதல் NVQ (National Vocational Qualifications) சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

28 நாள் வதிவிடப் பயிற்சி இவர்களுக்கு வழங்கப்படுவதுடன், வீட்டுப் பணிகளுக்குச் செல்லும் பெண்கள் NVQ மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு, NVQ மூன்றாம் நிலைச் சான்றிதழ் வழங்கப்படும் என வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

நிபுணத்துவத்துடனான பணியாளர்களை பணிக்கு அனுப்புவதே இதன் நோக்கம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

WhatsApp Group  Join Now