New Changes in Education System – Tamil Details

NEW CHANGES IN EDUCATION SYSTEM 

Polish 20231007 154033142

பாடசாலை மாணவர்களின் பரீட்சை சுமையைக் குறைக்கும் வகையிலும் மற்றும் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையிலும் 2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த கல்வி அமைச்சு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதனை அடிப்படையாகக் கொண்டு, முதற்கட்டமாக 2025 ஆம் ஆண்டு முதல் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 பாடங்களானது, 5 அல்லது 6 பாடங்களாகக் குறைக்கப்படும் என்றும், க.பொ.த உயர்தர பாடங்கள் 5 இல் இருந்து 8 அல்லது 9 ஆக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்தார்.

தற்போது அரசினால் முன்னெடுக்கப்படும் கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பரீட்சை முறைமையில் மேலும் பல விரிவான மாற்றங்கள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்கான திட்டம் 2025 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ், பாடசாலைகளால் நடாத்தப்படும் பரீட்சைகள் மூலம் புள்ளி வழங்கல் முறை பின்பற்றப்படும் எனவும், அதேவேளை 520 பாடசாலை வளாகங்கள் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

தற்போது அமுலில் உள்ள 01 – 13 தரங்கள், 01 – 12 ஆகக் குறைக்கப்படுவதுடன், பாடசாலைக் கல்வி 12 ஆம் வகுப்புடன் நிறைவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக பேராசிரியர் குணபால நாணயக்கார தெரிவித்துள்ளார்.

View Also: School Holiday News (Click Here)