அனைவரும் இயல்பாகவே கற்பனையும் சிந்தனைத்திறனும் உடையவர்கள். கற்பனையையும் சிந்தனைத்திறனையும் கொண்டு படைப்பாற்றலை தாமாகவே வளர்த்துக்கொள்ள Yarl IT Hub இன் Maker Space இனைப் பயன்படுத்த முடியும்.
மாணவர்கள் Maker Sapce இல் உள்ள உபகரணங்கள் மற்றும் பொருட்களை கொண்டு எதாவது ஒன்றை உருவாக்கலாம். உதாரணமாக மோட்டார் கார், ரோபோ, போன்றவற்றை உருவாக்கலாம். அல்லது புதிய சிந்தனையுடன் கூடிய ஆக்கம் ஒன்றையும் முயற்சி செய்து பார்க்கலாம்.
இதில் சிறப்பு என்னவென்றால் மாணவர்கள் வெறுமனே கோட்பாடுகளை கற்காது, தாமாக ஒன்றை உருவாக்கி அதன் மூலம் கற்று பின் ஆராய்ந்து முடிவெடுப்பர்.
Maker Sapce இல் மாணவர்களை வழிப்படுத்த மற்றும் உதவுவதற்காக வளவாளர்கள் இருப்பார்கள்.
டிசம்பர் 28 ஆம் திகதி முதல் ஒவ்வொரு புதன்கிழமையும் மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை.
இடம்: ஹட்ச் களம், 4வது மாடி, 218 ஸ்டான்லி வீதி, யாழ்ப்பாணம்.
மேலதிக விபரங்களுக்கு
0767673158 | Yarl IT Hub
