GREEN CARD VISA – 2024

Green Card
இம்முறை அமெரிக்க கிரீன் கார்டு (Green Card) திட்டத்துக்காக விண்ணப்பிப்பதற்கு கடவுச்சீட்டு (PASSPORT) அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
DV-2024 கிரீன் கார்ட் லாட்டரி திட்டம் ஒக்டோபர் 5, 2022 முதல் நவம்பர் 08, 2022 வரை மட்டுமே திறந்திருக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.

கிறீன் கார்ட் திட்டம் மூலம் குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து 55,000 நபர்களுக்கு ஆண்டுதோறும் அமெரிக்காவில் வசிக்க விசா வழங்கப்படுகிறது.  இத்திட்டத்திற்கான விண்ணப்பதாரர்கள் கணினியால் உருவாக்கப்பட்ட எழுமாறான லாட்டரி வரைதல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். விண்ணப்பதாரர் தெரிவு செய்யப்பட்டுள்ளாரா என்பது பற்றி DOS ஆன்லைனில் பிரத்தியேகமாக அறிவிக்கப்படும்.

மே 2023 அன்று முதல், விண்ணப்பதாரர்களில் யார் யார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் www.dvlottery.state.gov என்ற இணையதளத்தில் பார்வையிடலாம்.

கிரீன் கார்டு லாட்டரி திட்டத்தில் பங்கேற்க தகுதியற்ற நாடுகள்

DV-2024 கிரீன் கார்டு லாட்டரி திட்டத்திற்கு, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், சீனா, இங்கிலாந்து, பிரேசில், கனடா, தென்கொரியா, பிலிப்பைன்ஸ் உட்பட சில நாடுகளின் பூர்வீகவாசிகள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்களாவர்.

ஆனால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் கிரீன் கார்டு லாட்டரிக்காக விண்ணப்பிக்க முடியும் என்றும், இம்முறை விண்ணப்பிக்க கடவுச்சீட்டு (PASSPORT) அவசியம் இல்லை எனவும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

பதிவு செய்வதற்கான நடைமுறைகள்

DV-2024 கிரீன் கார்டு லாட்டரி திட்டத்திற்கு, ஒக்டோபர் 5, 2022 முதல் நவம்பர் 8, 2022 வரை விண்ணப்பங்களை மின்னணு (Online) முறையில் மட்டும் சமர்ப்பிக்க முடியும். இதற்காக கடிதம் மூலமான எவ்வித விண்ணப்பங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஒரு நபர் ஒரு விண்ணப்பத்தினை மாத்திரமே அனுப்ப முடியும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பினால், கிறீன் கார்ட் லாட்டரி திட்டத்திலிருந்து முழுவதுமாக அவர் நீக்கப்படுவார். ஆகவே, விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கும் போது மிகக் கவனமாக சமர்ப்பியுங்கள்.

DV – 2024 கிரீன் கார்டு லாட்டரி திட்டத்திற்கு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் பின்வருமாறு:

இந்த ஆன்லைன் மூலமான நுழைவு படிவத்தில் தரப்பட்ட அனைத்தையும் சரியாக நிரப்புங்கள்.

◾முழுப்பெயர் (உங்கள் பாஸ்போர்ட் / NIC இல் உள்ள படி)
◾பிறந்த திகதி
◾பாலினம்
◾நகரம் மற்றும் பிறந்த நாடு
◾தகுதி / கட்டணம் செலுத்தும் நாடு
◾விவரக்குறிப்புகளின் படி அமைந்த புகைப்படம்
◾மின்னஞ்சல் முகவரி
◾தற்போது நீங்கள் வாழும் நாடு
◾தொலைபேசி இலக்கம் (விரும்பினால்)
◾மின்னஞ்சல் முகவரி
◾உங்கள் கல்வி நிலை
◾திருமண நிலை
◾திருமணமாகாத மற்றும் 21 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தகவல்கள்
◾மனைவியின் பெயர் மற்றும் தகவல்கள் (முன்பு விவரிக்கப்பட்ட விவரக்குறிப்புகளுடன் அமைதல் வேண்டும்)

புகைப்படம்
பதிவேற்ற வேண்டிய டிஜிட்டல் படங்கள் பின்வரும் விவரக்குறிப்புகளுக்கு இணங்க அமைதல் வேண்டும்.

01. படம் (JPEG) வடிவத்தில் இருக்க வேண்டும்.

02. படம் நிறத்தில் இருக்க வேண்டும். (24 bits per Pixel)

குறிப்பு: கறுப்பு மற்றும் வெள்ளை / 8-பிட் படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

 03. ஏற்றுக்கொள்ளப்படும் அதிகபட்ச பட்ச அளவு 240 கிலோ பைட்டுகள் (240KB Size Photo)

04. ஏற்றுக்கொள்ளப்படும் குறைந்தபட்ச பரிமாணங்கள் – 600 பிக்சல்கள் (அகலம்) மற்றும் 600 பிக்சல்கள்.
உயரம், அகலத்திற்குச் சமமானதாக இருக்க வேண்டும்.

05. ஸ்கேனர் தெளிவுத்திறன் ஒரு அங்குலத்திற்குக் குறைந்தது 300 புள்ளிகளாக இருக்க வேண்டியது அவசியம் (dpi)

06. புகைப்படத்தில் நபரின் தலை நேராக இருக்க வேண்டும். கீழே அல்லது பக்கவாட்டில் சாய்ந்து இருக்கக் கூடாது.

07. நடுநிலை, வெளிர் நிற பின்னணியில் இருட்டாக உள்ள புகைப்படங்கள் அல்லது வடிவமைக்கப்பட்ட புகைப்படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

08. முகம் இல்லாத புகைப்படம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

09. சன்கிளாஸ் (Sunglass) அணிந்திருக்கும் புகைப்படங்கள் அல்லது முகத்தைக் கெடுக்கும் சாதனங்கள் கொண்ட புகைப்படங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

10. தலையில் தொப்பி அல்லது உறை அணிந்திருக்கும் புகைப்படங்கள் மட்டும் மத நம்பிக்கை காரணமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரரின் முகத்தில் வேறு எந்தப் பகுதியையும் மறைக்கக் கூடாது.

கல்வி அல்லது பணி அனுபவம் அவசியம் 

“கிரீன் கார்டு”க்கு தகுதி பெற, ஒவ்வொரு விண்ணப்பதாரரும் குறைந்தபட்சம் உயர்தரக்கல்வி (A/L) அல்லது அதற்கு சமமான கல்வி அல்லது கடந்த ஐந்து வருடங்களுக்குள் குறைந்தபட்சம் ஒரு தொழிலில் இரு வருட பணி அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும். கல்வி, பணி அனுபவ சான்றுகளை விண்ணப்பப் படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டியதில்லை.

DV கிரீன் கார்டு லாட்டரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாது. எந்த ஒரு முகவரிடமும் அல்லது இடைத்தரகரிடம் இதற்கென பணம் கொடுத்து விடாதீர்கள்.

விண்ணப்பித்தை சமர்ப்பித்த பிறகு வரும் Confirmation Number Page ஐ பத்திரமாக Screenshot, Print பண்ணிக் கொள்ளுங்கள்.

தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் May 6, 2023 முதல் dvprogram.state.gov என்ற இணையதளத்தில் நீங்கள் தெரிவு செய்யப்பட்டீர்களா இல்லையா என பார்க்க முடியும்.

விண்ணப்பிப்பதற்கான புகைப்படங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை இந்த இணையப்பக்கத்தில் காணுங்கள்.

Photo for Green Card Visa

• உங்கள் பணி அனுபவத்திற்கான அடிப்படை தேவையை கீழே உள்ள இணையதளத்திற்கு சென்று பாருங்கள்.

www.onetonline.org

• கிரீன் கார்டு திட்டத்திற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

https://dvprogram.state.gov/

JOIN WHATSAPP GROUP: CLICK HERE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *