2024 ஆம் ஆண்டு தொடக்கம், தரம் 01 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பாடசாலைத் தவணைப் பரீட்சைகளை வருடத்திற்கு ஒரு முறை மாத்திரம் நடாத்த, தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதுவரை காலமும் ஒரு ஆண்டுக்கு 03 தவணைப் பரீட்சைகள் என நடாத்தப்பட்டு வந்தன.
தற்போது, பாடசாலை மாணவர்களின் சுமையைக் குறைக்கும் வண்ணம், ஆண்டுதோறும் ஒரு தவணைப் பரீட்சையை மாத்திரம் நடாத்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு முதல், ஒவ்வொரு பாடசாலையிலும் தரம் 01 முதல் 13 வரை இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.