பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 10)
(01) 2024 ஆம் ஆண்டுக்கான T20 உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகள் எந்நாடுகளில் நடைபெறவுள்ளன?
விடை: அமெரிக்கா & மேற்கிந்தியத் தீவுகள் (US & West Indies)
(02) பிரான்சியப் புரட்சியின் போது உடைக்கப்பட்ட சிறைச்சாலை எது?
விடை: பஸ்டில் சிறைச்சாலை
(03) சீனா தனது சோஷலிச அணியைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கிய திட்டம் எது?
விடை: பட்டுப்பாதைத்திட்டம்
(04) சிம்பாப்வே நாட்டின் பழைய பெயர் என்ன?
விடை: தெற்கு ரொடீஷியா
(05) பொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
விடை: அடம் ஸ்மித்
(06) பிரித்தானியாவின் (UK) பிரதமர் யார்?
விடை: ரிஷி சுனக்
(07) ஐக்கிய நாடுகள் சபையினால் (UN) மனித உரிமைப் பிரகடனம் மேற்கொள்ளப்பட்ட ஆண்டு எது?
விடை: 1948
(08) எந்நாட்டின் மீது ரஷ்யா சுமார் இரண்டு வருடங்களாக தாக்குதல் நடாத்தி வருகின்றது?
விடை: உக்ரேன்
(09) குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்ட முதல் நாடு எது?
விடை: கொங்கோ
(10) அமெரிக்காவின் துணை ஜனாதிபதி யார்?
விடை: கமலா ஹாரிஸ்
By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka
Join WhatsApp Group | Click here |