General Knowledge – Series 09

Polish 20231116 183324314

பொது அறிவு வினா விடைகள் (தொடர் – 09)

 

(01) எந்த ஆண்டு ஜெர்மனியர்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என ஹிட்லர் அறிவித்தார்?

விடை: 1935

 

(02) ஹிட்லர் சிறையில் இருந்து எழுதிய, புகழ்பெற்ற நூல் எது?

விடை: எனது போராட்டம்

 

(03) அமெரிக்காவின் முதல் ஜனாதிபதி யார்?

விடை: ஜோர்ஜ் வாஷிங்டன்

 

(04) ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-23 இல் எவ்விஷேட தினம் கொண்டாடப்படுகிறது?

விடை: உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம்

 

(05) IAAF என்பதன் விரிவாக்கம் என்ன?

விடை: International Association of Athletics Federations (தடகள விளையாட்டுக் கூட்டமைப்புக்களின் பன்னாட்டுச் சங்கம்)

 

(06) IMF (International Monetary Fund) அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?

விடை: வாஷிங்டன், அமெரிக்கா

 

(07) உலகின் மின்னல் வேக வீரர் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட், மொத்தமாக ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற தங்கப்பதக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?

விடை: 08

 

(08) சர்வதேச செவிலியர் தினம் எந்த செவிலியரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அனுசரிக்கப்படுகிறது?

விடை: புளோரன்ஸ் நைட்டிங்கேல்
(இங்கிலாந்துத் தாதி)

 

(09) நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல், எவ்வாறான சிறப்புப் பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டார்?

விடை: ´விளக்கேந்திய சீமாட்டி´, ´கை விளக்கேந்திய காரிகை´ (The Lady with the Lamp)

 

(10) 2023 ICC Men’s Cricket உலகக் கிண்ணத்தை நடாத்திய நாடு எது?

விடை:  இந்தியா

 

By: Rafees Safath,
AAL(R), Srilanka Law College,
LLB (R), Open University of Srilanka

 GK Series – 10Click here
GK WhatsApp GroupClick here