Free Solar Power House Project – Full Details

Free solar powered house

வட மாகாணத்திற்கான, தலா ரூபா. 50 இலட்சம் பெறுமதியான 25,000 சூரிய மின்னுற்பத்தி இலவச வீட்டுத் திட்டத்திற்குரிய விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

விண்ணப்பங்கள் தற்போது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும்.

இதுவரை, இவ்வீட்டுத் திட்டத்துக்கு விண்ணப்பிக்காத, தகுதியுள்ள பயனாளிகள், தமது விண்ணப்பங்களை பிரதேச செயலாளர்கள் (DS) ஊடாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எனவே, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய 05 மாவட்டங்களிலும் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.

வீட்டு நிர்மாண பணிகளுக்காக கட்டணங்கள் எதுவும் பயனாளிகளிடமிருந்து அறவிடப்பட மாட்டாது.

Polish 20231206 165343019

710 சதுர அடிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படும். கூரைகளில் 1,000 சதுர அடிகளில் சூரிய மின்கல தொகுதிகள் (SOLAR PANEL) பொருத்தப்படும். எஞ்சும் பகுதிக்கு சீமெந்து தரையிடப்படும்.

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் ஏற்கனவே வீட்டுத் திட்டம் வழங்கப்பட்டு நிறைவு செய்யப்படாதவர்கள், மீள்குடியேற்றத்தின் பின்னர் காணி இல்லாமல் போனவர்கள் இத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

அத்துடன், சொந்தக்காணி இருந்தும் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்கள், வீட்டுத் திட்டத்தை பெற்றுக்கொள்வதற்கு வேறு ஏதேனும் வழியில் தகைமையுடையவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.

இப்புதிய வீட்டுத் திட்டத்தின் மூலம் காணியற்றவர்களுக்கு, அரச காணியில், தொகுதி (CLUSTER) வீடமைப்பு திட்டமும் அமுல்படுத்தப்பட உள்ளது.

வெளிநாட்டு தனியார் முதலீட்டு நிறுவனம் ஒன்றினூடாக செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ்,  வீட்டின் கூரைகளில் பொருத்தப்படும் சூரிய மின்படலத்திலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தை 20 வருடங்களுக்கு மட்டும், வீட்டு உரிமையாளர்கள் குறித்த முதலீட்டு நிறுவனத்திற்கு வழங்க வேண்டும்.

இவ்வீட்டுத்திட்டம் தொடர்பாக மேலதிக தகவல்கள் அல்லது முறைப்பாடுகள் காணப்படுமாயின், வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பின்வரும் முறையில் நேரடியாக அறிவிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

▪️தொலைபேசி இலக்கம்: 021 221 93 70
▪️மின்னஞ்சல் முகவரி: plangov@np.gov.lk

▪️முகவரி:
ஆளுநரின் செயலாளர்,
ஆளுநர் செயலகம்,
பழைய பூங்கா,
சுண்டுக் குழி,
யாழ்ப்பாணம்.