Download O/L Admission Card 2026 – Department of Examinations

Download GCE.O/L Exam Admission Card 2026 - Department of Examinations
IMG 20261127 WA0004
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 – அனுமதி அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ள விசேட அறிவிப்பு!

இலங்கை பரீட்சைகள் திணைக்களம், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அனுமதி அட்டைகளில் காணப்படும் தவறுகள் மற்றும் குறைபாடுகளைத் திருத்திக்கொள்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 டிசம்பர் 08 முதல் டிசம்பர் 17 வரை நாடளாவிய ரீதியில் 3,519 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

அனுமதி அட்டையில் திருத்தங்களை மேற்கொள்ளும் முறை

பாடசாலைப் பரீட்சார்த்திகள் (School Candidates)

  • பாடசாலைப் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின், அதிபர் அல்லது அதிகாரம் பெற்ற பாடசாலை உத்தியோகத்தர் ஊடாக இணையவழியில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.
  • இதற்காக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையவழி முறைமையில் வழங்கப்பட்டுள்ள User Name மற்றும் Password ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட பரீட்சார்த்திகள் (Private Candidates)

  • தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தமது அனுமதி அட்டையில் பெயர், முகவரி, பரீட்சை மொழிமூலம், ஆண்/பெண் போன்ற விபரங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியிருப்பின், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குச் செல்ல வேண்டும்.
  • தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்து, அனுமதி அட்டையில் தேவையான திருத்தங்களை இணையவழியில் மேற்கொள்ள முடியும்.

திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய காலப்பகுதி

2026 நவம்பர் 19 முதல் 2026 நவம்பர் 30 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்.

குறித்த காலப்பகுதிக்குப் பின்னர் அனுமதி அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ள முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய அறிவிப்பு

பரீட்சார்த்திகள் தங்களது அனுமதி அட்டைகளில் உள்ள பெயர், முகவரி மற்றும் ஏனைய விபரங்களைச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருப்பின் அறிவிக்கப்பட்ட காலப்பகுதிக்குள் திருத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலதிக தகவல்களுக்கு

  • அவசர தொலைபேசி இலக்கம்: 1911
  • தொலைபேசி இலக்கங்கள்: 011-2784208 / 011-2784537
  • தொலைநகல்: 011-2784422
  • மின்னஞ்சல்: gceolexams1@gmail.com
  • உத்தியோகபூர்வ இணையத்தளம்: https://www.doenets.lk