பட்டதாரி ஆசிரியர் இரண்டாவது பட்டியல் விரைவில் வெளிவரலாம்!
தற்போது நடைபெற்று வரும் பட்டதாரி ஆசிரியர் நேர்முகப் பரீட்சையில், F1 படிவத்தில் “YES” என உறுதிப்படுத்தாத பட்டதாரிகள், முன் வைப்புக்கு அனுமதிக்காது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
குறிப்பாக கணிதம், ஆங்கில மொழி, இரண்டாம் மொழி சிங்களம், மனைப் பொருளியல், பொருளியல் பாடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட பட்டதாரிகளுக்கு குறித்த பாடத்தில் 1/3 கிரெடிட் இல்லாத காரணத்தால் திருப்பி அனுப்பி வைத்தனர். குறிப்பாக F1 படிவத்தில் YES எனக் குறிப்பிட்டவர்களின் விரிவான பரீட்சை பெறுபேற்றில் 1/3 உள்ளதா? என்பதையும் பரிசீலனை செய்கின்றனர்.
இதனால் அனேகமான பட்டதாரிகள் குறித்த பாடத்திற்கு தெரிவு செய்யப்படாத காரணத்தால், குறித்த பாடத்தில் அதிக புள்ளிகள் பெற்ற பட்டதாரிகளின் இரண்டாவது பட்டியல் வெளிவரும்.
இந்த இரண்டாவது பட்டியல் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் அடிப்படையில் காத்திருப்பு பட்டியலுக்கு ஏற்ப கற்கைநெறிக்கு தெரிவு செய்யும் விதத்தை ஒத்திருக்கும்.
| All Island Service வழிகாட்டல் வட்ஸ்அப் குழு | Click here |
