இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம், இலங்கைப் பிரஜைகளுக்கு வாட்ஸ்அப் ஊடாக நடைபெறும் விசா மோசடி தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம், தாம் வாட்ஸ்அப் அல்லது பிற சமூக ஊடக வலைத்தளங்கள் ஊடாக விசாக்களை நடைமுறைப்படுத்துவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
உயர்ஸ்தானிகராலயம் மேலும் கூறியுள்ளதாவது, விசாக்களுக்காகவென அதிகாரிகள் பணத்தைப் பெறுவதில்லை. ஆகவே சமூக வலைத்தளங்களில் பரவிவரும் கனடா விசா மோசடிகள் தொடர்பில் சற்று கவனமாக இருக்குமாறு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், இலங்கையர்களின் கனேடிய குடியேற்றம் பற்றிய விபரங்களுக்கு பின்வரும், தமது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை மட்டும் பார்வையிடுமாறு கோரியுள்ளது.
https://www.canada.ca/en/services/immigration-citizenship.html