Aswesuma Latest Updates

ASWESUMA LATEST UPDATE (12.04.2024)

Polish 20240412 142515238

CLOSING DATE – TODAY (22.03.2024)

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் சுற்றுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இணையவழி ஊடாக இதுவரை சுமார் 250,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, மற்றுமொரு குழுவினர் தமது விண்ணப்பங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறும் மக்கள் தற்போது 16 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளதுடன், அடையாள அட்டை (NIC) இல்லாமை மற்றும் ஆவணங்களில் உள்ள பிரச்சனைகளால் இதுவரை 300,000 பேருக்கு மேல் நிவாரணம் வழங்க முடியவில்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Aswesuma ApplicationClick here

ASWESUMA UPDATE (03.03.2024)

இதேவேளை, அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக தவறான தகவல்களை வழங்கிய 7,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தவறான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால், சட்டத்தின் படி, குறித்த நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.

ASWESUME NEW UPDATE (29.02.2024)

அஸ்வெசும நலன்புரி பயனாளிகள் அனைவருக்கும் விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் , “அஸ்வெசும” மற்றும் “உறுமய” திட்டங்களை மக்களிடம் முறையாக எடுத்துச் செல்வதற்கு அரச அதிகாரிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தளை, வில்கமுவ பிரதேச செயலகத்தில் இன்று (29) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

NIC IMPORTANT (17.02.2024)

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களில் அடையாள அட்டை (NIC) கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

ஒரு நபர் பல விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதைத் தடுக்கும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட விண்ணப்பம் கோரலின் போது, அடையாள அட்டை கட்டாயமாக்கப்படவில்லை. இம்முறை விண்ணப்பிக்கும் போது அடையாள அட்டை இலக்கத்தை கட்டாயம் குறிப்பிடுதல் வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

Aswesume Application 2024Click here

ASWESUME NEW APPLICATION 2024 

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெறுவதற்கான விண்ணப்பங்களை இம்மாதம் 15 ஆம் திகதி முதல் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மேலும் 400,000 பேர் இதற்காகத் தெரிவு செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அஸ்வெசும வசதிக்கான குடும்பங்களை தெரிவு செய்கையில் கடைபிடிக்கப்பட்ட வரைமுறைகளால், கடந்த முறை விண்ணப்பிக்க முடியாது போனவர்களும் இம்முறை விண்ணப்பிக்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இம்முறை விண்ணப்பதாரர்களின் அடையாள அட்டை இலக்கம் (NIC) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தமது அடையாள அட்டை இலக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

அவ்வாறு, அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. எனவே அடையாள அட்டை இல்லாதவர்கள் உடனடியாக அடையாள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

 

ASWESUME NEW UPDATE (30.01.2024)

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தை கீழ்வரும் திருத்தங்களை உள்ளடக்கி நடைமுறைப்படுத்த, ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

416650071 1440687710135550 7782903006163563083 n

 

ASWESUME APPLICATION UPDATE (02.01.2024)

2024 ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும விண்ணப்பங்களை கோரும் செயற்பாடுகள் இந்த மாத இறுதியில் / பெப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, நிதி இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

ASWESUMA NEW UPDATE (28.12.2023)

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டப் பணிகள் பெப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, அஸ்வெசும திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் மாதாந்தக் கொடுப்பனவாக 2500/- ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

ASWESUME BENEFICIARIES (24.12.2023)

அஸ்வெசும நலன்புரி உதவிகளைப் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கையை 20 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக அதிகரிக்கவுள்ளதாக, நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2024 ஜனவரி மாதம் மீண்டும் இரண்டாம் கட்ட விண்ணப்பங்களைக் கோருவதன் மூலம், பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

DECEMBER ASWESUMA PAYMENT  (21.12.2023)

அஸ்வெசும டிசம்பர் மாதத் தவணையைச் செலுத்துவதற்காக, 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதியானது, 1,410,064 பதிவு செய்யப்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

ASWESUMA APPLICATION UPDATE (11.11.2023)

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்க முன், முதற் கட்டம் தொடர்பான விரிவான மீளாய்வை மேற்கொள்ள அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இரண்டாம் கட்ட அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மூலம், பயனாளிகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

அதற்காக, 2024 ஆம் ஆண்டிற்கு 205 பில்லியன் ரூபா நிதி அஸ்வெசும திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

 

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கான செய்தி (10.10.2023)

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனக்காகத் தெரிவு செய்யப்பட்டு கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளாதவர்கள், விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து, தாமதமின்றி கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

வங்கிக் கணக்குகளை உரிய வகையில் திறக்காததன் காரணமாக, ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 261 பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

அஸ்வெசும பெயர்ப்பட்டியலைப் பார்வையிட…

Name List Click here 

 

அஸ்வெசும கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்படாமைக்கான காரணம் அறிய…

நலன்புரி நன்மைகள் சபையின் கொடுப்பனவை பெறுவதற்கு விண்ணப்பித்து இதுவரை கொடுப்பனவுகள் கிடைக்காத குடும்பங்கள் கீழுள்ள CHECK NOW என்பதை கிளிக் செய்து தங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது நலன்புரி நன்மைகள் சபையால் வழங்கப்பட்ட QR இலக்கம் (குடும்ப அலகு இலக்கம்) குறிப்பிட்டு search என்பதை கிளிக் செய்து

✅நீங்கள் தெரிவு செய்யப்படாமைக்கான காரணம்

✅உங்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை

✅நீங்கள் செய்த முறைப்பாட்டின் நிலை என்பவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

அறிந்து கொள்ள Check Now என்பதை கிளிக் செய்யுங்கள்.

CHECK NOW (CLICK HERE)

Join Our MASTER WhatsApp Group: Click here