கிழக்கு மாகாணத்தில் நீண்ட காலமாக நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை கருத்திற் கொண்டு, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால், 700 பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்குமாறு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் நேற்று கையொப்பம் இட்டார்.
கடந்த காலங்களில், கிழக்கு மாகாண ஆளுநரால், கிழக்கு மாகாணத்தில் 633 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது. இதேவேளை, தற்போது மேலும் 700 பட்டதாரி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.
கிழக்கில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாகவும், மாகாண கல்வித் துறையை மென்மேலும் விருத்தி செய்யும் நோக்கிலும் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Also View: Graduate Teaching Vacancies – Western Province