எதிர்காலத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை (GCE.O/L) தரம் பத்தில் நடாத்துவது தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
இதன்மூலம் ஒரு வருடத்துக்கு முன்னரே, மாணவர்கள் பல்கலைக்கழகம் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தைப் பெறுவர் என அவர் குறிப்பிட்டார்.
கல்வி நிபுணர்கள் உள்ளடங்கிய குழு ஊடாக இது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய, பத்தாம் தரத்தில் GCE.O/L பரீட்சையை நடாத்துவதற்கு ஏதுவான வகையில், தரம் 6,7,8,9 பாடத்திட்டங்களை ஒழுங்கமைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கு கொண்டு உரையாற்றிய போதே, இதனை அவர் தெரிவித்தார்.
අනාගතයේදී සාමාන්ය පෙළ සාමාන්ය පෙළ විභාගය දහයේ පන්තියේදී සොයා බලන බව අධ්යාපන අමාත්ය සුෂිල් ප්රේමජයන්ත මහතා පැවසීය.
මේ අනුව වසරකට පෙර විශ්වවිද්යාල ප්රවේශය සඳහා සිසුන්ට අවස්ථාව ලැබෙන බවද ඔහු සඳහන් කළේය.
අධ්යාපන විශේෂඥයන්ගෙන් සැදුම්ලත් කමිටුවක් මගින් මේ සම්බන්ධයෙන් අධ්යයනයන් සිදු කෙරේ.
ඒ අනුව අ.පො.ස. සා/පෙළ විභාගය 10 වැනි ශ්රේණියේ පැවැත්වීම සඳහා 6, 7, 8, 9 ශ්රේණිවල විෂය නිර්දේශය සංවිධානය කිරීම කෙරෙහි ද අවධානය යොමු කරන බව අධ්යාපන අමාත්යවරයා වැඩිදුරටත් පැවසීය.
ඔහු මේ බව කියා සිටියේ ඊයේ කොළඹ පැවති වැඩසටහනකට එක්වෙමින්.