ஏப்ரல் 2023 முதல் 33,000 புதிய ஆசிரியர்களை பாடசாலைகளுக்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தேசிய கல்வியியற் கல்லூரி (National College of Education) பெறுபேறுகள் மார்ச் – 30 ஆம் திகதி வெளியிடப்படுவதுடன், அதிலிருந்து 7,500 ஆசிரியர்கள் பாடசாலைகளில் பணியமர்த்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான போட்டிப்பரீட்சையானது, நாடு பூராகவும் இம்மாதம் மார்ச்-25 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இப்போட்டிப் பரீட்சைக்கு 53,000 விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் இருந்து 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்த்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, எதிர்வருகின்ற ஏப்ரல் முதல் மொத்தமாக 33,000 ஆசிரியர்களை அரச பாடசாலைகளில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
(Join Our WhatsApp Group: Click here)
33,000 teacher appointments will be given – Education Minister
Minister of Education Susil Premajantha said yesterday in parliament that around 33,000 new teachers will be appointed from April. Minister said that 7500 teachers from National College of Education are likely to be placed before the end of April.
Additionally, Applications have been invited for the competitive examination to recruit 26,000 graduates as teachers. This competitive exam will be held on March 25. Accordingly, through these 02 methods, it is planned to appoint about 33,000 teachers.
Join Our WhatsApp Group: Click here