முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாள் தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியை, இலங்கையில் விஷேட விடுமுறையாகப் பிரகடனப்படுத்துமாறு இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கம், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சுக்கு இன்று 2024.04.17 கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் அனைவரும் புனித ரமழான் நோன்புப் பெருநாளை தமது மத கலாச்சார விழுமியங்களுக்கு அமைவாக ஏப்ரல் 10 ஆம் தேதி அனுஷ்டித்தனர்.
இத்தினம் அரச அலுவலக வேலை நாளாக இருந்தமையினால், முஸ்லிம்கள் குறித்த தினத்தில், சொந்த விடுமுறையில் பெருநாளைக் கொண்டாட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இந்நிலையைக் கருத்திற் கொண்டு, இலங்கை முஸ்லிம்களின் புனித நோன்புப் பெருநாள் தினமான ஏப்ரல் 10 ஆம் திகதியை முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு, விஷேட விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.